அதிர்ச்சி... 4வது மாணவர் உயிரிழப்பு... அமெரிக்காவில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இந்திய மாணவர்கள்!

By காமதேனு

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த ஒரு மாத காலத்தில் இதுபோன்ற நான்காவது சம்பவமாகும்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் என்ற இந்திய வம்சாவளி மாணவர், அங்குள்ள லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று உயிரிழந்ததாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பெனிகரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "ஓஹியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவரான ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தவறுகள் நடந்ததாக சந்தேகிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை அன்று, பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா இறந்து கிடந்தார். மற்றொரு சம்பவத்தில், ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் வசிக்கும் விவேக் சைனி, கடந்த ஜனவரி 16ம் தேதி அன்று கொல்லப்பட்டார்.

இதேபோல், கடந்த ஜனவரியில் இல்லினாய்ஸ் அர்பனா-சாம்பெயின் பல்கலைக்கழகத்தின் (யுஐயுசி) வெளியே, இந்திய மாணவர் அகுல் தவான், இறந்து கிடந்தார்.

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை.

இதையும் வாசிக்கலாமே...


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை... சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனையால் பரபரப்பு!

'#தலைவர் விஜய்'... ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

கோடிகளைக் குவிக்கும் அயோத்தி ராமர்... 10 நாட்களில் 25,000,00 பக்தர்கள் தரிசனம்! 11 கோடி காணிக்கை!

பெரும் பதற்றம்... துணை ராணுவம் குவிப்பு... டெல்லியில் ஆர்ப்பாட்டம்... இரண்டு மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

மகளிர்க்கு இலவச பேருந்து பயணம்... எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கொளுத்தி போராட்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE