ஜெர்மனி நாட்டில் வாரத்துக்கு 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள், வாரத்திற்கு 4 வேலை நாட்கள் முறைக்கு மாறி வருகின்றன. வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதை 4 நாட்களாக குறைப்பதன் மூலமாக தொழிலாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை செயல்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம் 4 நாட்களுக்கு 32 மணி நேரம் மட்டும் வேலை நேரமாக நிர்ணயிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தல்களும் இருந்து வருகிறது.
சில நாடுகளில் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வீதம், வாரம் ஒன்றுக்கு 50 நேரத்திற்கும் மேலாக வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் 2022ம் ஆண்டிலிருந்து சோதனை அடிப்படையாக வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. டென்மார்க், ஐக்கிய அரபு நாடுகள், பின்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வாரம் 4 நாள் வேலை முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் இன்று முதல் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 4 நிறுவனங்களில் வாரம் 4 நாட்கள் வேலை திட்டத்தை செயல்படுத்த ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. வாரம் 4 நாள் வேலைமுறையால், உற்பத்தி திறன் மேம்படுகிறதா என்பதையும், அதன் பொருளாதார விளைவுகள் குறித்தும் ஆராய்ந்து, பின்னர் படிப்படியாக அனைத்து நிறுவனங்களுக்கும் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 6 மாதங்களுக்கு இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. இந்த செயல் திட்டத்திற்கு தொழிலாளர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் இந்த முறை, வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தினசரி 8 மணி நேரமும், வாரத்திற்கு 6 நாட்களும் வேலை நேரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பால ராமரை தரிசிக்க அயோத்திக்கு 6 நாட்கள் பாதயாத்திரை... 350 இஸ்லாமியர்கள் பங்கேற்பு!
அமைதிக்கான நோபல் பரிசு... 4வது முறையாக டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை!
அதிர்ச்சி... வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு!
உஷார்...அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இன்று முதல் சலுகைக் கட்டணத்தில் பயணம்...புதிய வசதியுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்!