எங்கள் நாட்டினர் இருவரைக் கொன்றது இந்தியா...பாகிஸ்தான் பகீர் குற்றச்சாட்டு!

By காமதேனு

தங்கள் குடிமக்கள் இரண்டு பேரை இந்திய ஏஜென்ட்டுகள் 2023-ம் ஆண்டில் கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் கொடி

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு தற்போது அதே வகையிலான இன்னொரு குற்றச்சாட்டை பாகிஸ்தான் சுமத்தியுள்ளது. ஆனால், இந்தியா அதை மறுத்துள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், "2023-ம் ஆண்டு செப்டம்பரில் ராவல்கோட் நகரில் முகமது ரியாஸ் மற்றும் அக்டோபரில் சியால்கோட் நகரில் ஷாஹித் லத்தீப் ஆகியோர் இந்திய ஏஜென்ட்டுகளால் கொல்லப்பட்டனர்.

அதில் ஒருவர் ஒரு மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் ஒரு மசூதிக்கு வெளியே கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் எல்லை

இந்த இரண்டு கொலைகளுக்கும் இந்திய ஏஜென்ட்டுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை உறுதிபட தெரிவித்துள்ளது.

ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ளது. இதை தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE