இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் அதிபரின் குடியரசு தினப் பரிசு!

By காமதேனு

" 2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அதுதான் எனது இலக்கு" என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் குடியரசு தினப் பரிசாக இந்த அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் மோடியுடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்

75வது குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியா வந்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், " 2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இதுவே எனது உயரிய இலக்கு. அதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறேன்.பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படிக்க அனுமதிக்கும் வகையில்,சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும்.

மாணவர்கள், பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களை உருவாக்கி வருகிறோம். சர்வதேச அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்கள் எங்கள் பல்கலைக்கழகங்களில் சேரலாம். பிரான்சில் படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிமையாக்குவோம்.

இந்தியாவும், பிரான்சும் எதிர்காலத்தில் தோழமை உணர்வுடன் இணைந்து செய்ய வேண்டியது அதிகம் இருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE