குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்தடைந்தார்.
நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு விமானம் மூலம் இம்மானுவேல் மேக்ரான் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் ஜெய்ப்பூருக்கு வருகைதர உள்ளார்.
பின்னர், அவர்கள் இருவரும் ஜெய்ப்பூர் அம்பர்கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹவா மஹால் ஆகிய இடங்களுக்குச் செல்ல உள்ளனர். மாலையில் ஹோட்டல் ராம்பாக் பேலஸில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்கு முன்னதாக இருவரும் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் வரை சாலையில் பேரணியாக செல்ல உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
நான் சாகும் வரை முஸ்லிம் தான்... நடிகை குஷ்பு உணர்ச்சிகர பதிவு!
நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை... நெருங்கும் தேர்தல்... பரபரக்கும் அரசியல் களம்!
போதையில் காதலனை 108 முறை குத்திக் கொன்ற இளம்பெண்!
கங்கையில் மூழ்கடித்து 5 வயது குழந்தை கொடூரக் கொலை: மூடநம்பிக்கையால் பெற்றோர் வெறிச்செயல்!
டெல்லியில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்... மூடுபனியால் ஆரஞ்சு அலர்ட்!