‘குழந்தைகளை காப்பாற்றுங்கள்’ காசா குண்டுகள் முழக்கத்துக்கு இடையே அறைகூவும் மருத்துவர்கள்!

By காமதேனு

போர்க்களத்தில் சாகும் குழந்தைகளுக்காகவும், படுகாயமடைந்த குழந்தைகளை மீட்பதிலும், காசா மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அக்.7 அதிகாலை இஸ்ரேல் மீதான ஹமாஸ் போராளிகளின் கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, நீண்ட போரினை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. “போரை நாங்கள் தொடங்கவில்லை. எனவே, ஹமாஸ் பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்கும்வரை போர் நிற்காது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்து விட்டார். இதனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காசாவில் நுழைந்து கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன.

ஹமாஸின் ஆயுதக் குழுவினர் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி குடியிருப்பு பகுதிகளில் ஒளிந்துகொண்டு தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலின் பெயரில் அங்கே ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். பெண்கள், முதியவர்கள் மட்டுமன்றி, நடப்பது இன்னதென்று விளங்காத பச்சிளம் குழந்தைகளும் இந்தப் போரில் பலியாகி வருகின்றனர்.

காசா கட்டிட இடிபாடுகளில் மீட்கப்பட்ட குழந்தை

குண்டுவீச்சு காரணமாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதிலும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும், மருத்துவர்களின் முயற்சியை மீறி சாகும் குழந்தைகள், காசா மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகத்தையும் உலுக்கி வருகின்றன.

காசா போர்க்கள நிகழ்வுகள் தொடர்பாக இணையத்தில் பரவி வரும் வீடியோக்களில், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பானவை அனைவரையும் உருகச் செய்கின்றன. குண்டுவீச்சால் இடிந்த கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தையை இயல்புக்கு கொண்டுவர மருத்துவர் ஒருவர் மெனக்கிடும் வீடியோ ஒன்று இந்த வகையில் கவனம் ஈர்த்துள்ளது.

அதே போன்று மருத்துவமனையில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் பச்சிளம் குழந்தைகளின் சடலங்களைப் பார்த்து மருத்துவர் ஒருவர் கலங்கும் வீடியோவும் காண்போரை உருக்கத்தில் ஆழ்த்துகிறது. ’இந்த குழந்தைகளை கொன்றது யார்? போரிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்’ என்று அந்த மருத்துவரின் அறைகூவலும், போரின் கோரத்தை முகத்தில் அறையச் செய்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE