இலங்கையில் கருத்து சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு?: புதிய மசோதா கொண்டு வர திட்டம்!

By காமதேனு

ஆன்லைன் பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. 83 உறுப்பினர்கள் ஆதரவளித்ததை தொடர்ந்து மசோதா மீதான விவாதத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆன்லைன் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவுவதையும், நம்பத்தகாத கணக்குகளைத் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுப்பதையும் நோக்கமாக கொண்டு ஆன்லைன் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட உள்ளது.

இலங்கை நாடாளுமன்ற கூட்டம்.

இந்த மசோதா பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் பாதுகாப்பு மசோதா மீது இரண்டு நாள் விவாதம் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்க, அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனா, வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் 83 பேர் விவாதம் நடத்த வேண்டும் என வாக்களித்தனர். 50 பேர் விவாதம் தேவையில்லை என வாக்களித்தனர். இந்த மசோதா தொடர்பான நிலைப்பாடு குறித்து ஆலோசிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் டிரன் அல்லெஸ் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவில் சில திருத்தங்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா நாளை அங்கீகரிக்கப்பட்ட பிறகு அந்த திருத்தங்கள் சேர்க்கப்படும்" என்றார்.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆன்லைன் கணக்குகள் இயங்கும் இருப்பிடங்களை அடையாளம் கண்டு அறிவிக்கவும், தவறான செயல்பாடுகளுக்கு நிதியுதவியை ஒடுக்கவும், உண்மைக்கு மாறான தகவல் தொடர்புகளைக் கட்டுப்படுத்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பு ஆன்லைன் தீவிர செயல்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையும் வாசிக்கலாமே...


வசீகரிக்கும் வீடியோ... ஏஐ தொழில்நுட்பத்தில் கண் சிமிட்டி, புன்னகைக்கும் அயோத்தி ராமர்!

பெண்களுக்கு சினிமா ஆசைகாட்டி மோசம்... ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் கைது!

எலும்பு முறிவு; படுத்த படுக்கையான அருண்விஜய்... வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

உஷார்... டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 3 வயது குழந்தை பலியான சோகம்!

அதிகளவில் மது; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேக்ஸ்வெல்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE