பதற்றம்… ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

By காமதேனு

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் யூத வழிபாட்டு தலம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஸ்பெயின், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொ்லினில் நடைபெற்ற கலவரத்தின் போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த இடம் முழுவதும் பதற்றம் நிலவியது.

இதையடுத்து, பெர்லின் நகரின் மத்தியில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷால்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE