வடகொரியாவில் ராணுவ தளபதி ஒருவர் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு பிரானா மீன் தொட்டியில் வீசி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகில் இருந்து வடகொரியா முற்றிலுமாக தனித்து இருக்கும் நிலையில், மர்மங்கள் நிறைந்த நபராகவே கிம் ஜாங் உன் அறியப்படுகிறார். பிடிக்காத நபர்களை உரிய விசாரணை இன்றி கொல்வது, நாட்டு மக்களை மிக மோசமான நிலையில் வைத்திருப்பது என அவர் மீதான விமர்சனம் அதிகம்.
இதற்கிடையே வடகொரியாவில் நடந்த மிக மோசமான கொலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் ஜெனரல் ஒருவரை மிக கொடூரமாக கொல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த ஜெனரல் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அதாவது கிம் ஜான் உத்தரவின்படி அந்த நபர் கொடூரமான பிரானா மீன்கள் இருக்கும் தொட்டியில் வீசி கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த ஜெனரல், கிம்முக்கு எதிராகச் சதி செய்ததாகவும் வடகொரியாவைக் கைப்பற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே அந்த ஜெனரல் கொல்லப்பட்டுள்ளார். வடகொரியாவில் கிம்முக்கு எதிராகச் சதி செய்வோர் இதுபோல வினோதமான முறையில் கொல்லப்படுவது தொடர்கதையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக ராட்சத மீன் தொட்டி ஒன்று ரியாங்சாங்கில் உள்ள கிம் இல்லத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த வட கொரிய ஜெனரல் மீன் தொட்டியில் வீசப்படுவதற்கு முன்பு அவரது கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அவர் பிரானா தாக்குதலால் உயிரிழந்தாரா அல்லது காயங்களால் இறந்தாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. தனக்கு எதிராகத் துரோகம் செய்வோரைக் கொல்லவே இந்த பிரானாக்களை கிம் ஜான் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
1977-ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'தி ஸ்பை ஹூ லவ்ட் மீ' என்ற படத்தை கிம் சமீபத்தில் பார்த்ததாகவும் அதன் பிறகே அந்தப் படத்தில் வருவதைப் போல இப்படி பிரானாவை வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ராணுவ ஜெனரலை சேர்த்து இதுவரை குறைந்தது 16 பேரின் உயிரை கிம் ஜான் இந்த முறையில் பறித்தாக கூறப்படுகிறது.
முன்னதாக, வட கொரியாவின் ராணுவத் தளபதி மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய இருவரும் இதேபோல கொல்லப்பட்டனர். தனக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் கலகம் எதுவும் செய்யக் கூடாது என்பதற்காக அவர்களை அச்சுறுத்தவே கிம் இதுபோல மிக மோசமான முறையில் தனது எதிரிகளைத் தீர்த்துக் கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும், கிம் எப்போது எந்த முடிவை எடுப்பார் என்றே தெரியாது. இதனால் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நபர்கள் கூட திடீரென கொல்லப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாகவே வடகொரியாவில் மக்கள் மட்டுமின்றி உயர்மட்ட அதிகாரிகளும் கூட அச்சத்திலேயே உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!