லண்டனில் நடைபெற்ற எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, சூழியல் போராளி கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட பலர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஸ்வீடனை சேர்ந்தவர் சூழியல் போராளியான கிரேட்டா துன்பர்க். பள்ளிப்பருவம் முதலே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். உலகெங்கும் உள்ள ஒத்த அலைவரிசையிலான போராட்டக்காரர்களுடன் இணைந்தும் இவர் செயல்பட்டு வருகிறார்.
இந்த வகையில் லண்டனில் நேற்று நடைபெற்ற பெரும் எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டுக்கு எதிராக, கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட சூழியல் செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், விசாரணைக்குப் பின்னர் கைது செய்தனர்.
ஆண்டுதோறும் புவியின் வெப்பம் அதிகரித்தபடியே செல்கிறது. இதனால் அதிகரிக்கும் காலநிலை மாற்றம் மற்றும் சூழியல் சீர்கேடுகளால் உலகம் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொள்வதாக உலகத் தலைவர்கள் விசனம் கொண்டுள்ளனர். எனினும் நடைமுறையில், வளர்ந்த நாடுகள் எதுவும் மாற்றத்தை கொண்டு வருவதாக இல்லை. ஏழ்மை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் மீது பழியைப் போட்டு, வளர்ந்த நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வு குறித்து கவலைப்படாது இருக்கின்றன.
இவற்றுக்கு எதிராகவும், இவர்களின் ஆசிகளோடு வலம் வரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராகவும் கிரேட்டா துன்பர்க் போன்ற சூழியல் போராளிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கிரேட்டா துன்பர்க் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள், போராட்டக்காரர்களை கடுமையாக சாடினார்கள்.
“எல்லோரையும் மகிழ்வாக வைத்திருக்க வேண்டுமானால் ஐஸ்க்ரீம் விற்க வேண்டும் என்று சொல்வார்கள். நாங்கள் அவ்வாறு ஐஸ்க்ரீம் விற்கவில்லை. மேலும் எங்களில் சகிப்புத்தன்மை குறைவானவர்களும் இருக்கிறார்கள்” என்று மிரட்டும் தொனியில் எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசியது கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!