ஹமாஸை இந்த பூமிப்பந்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம். ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் உட்பட அவரின் குழுவினர் எங்கள் பார்வையில் இருக்கின்றனர். விரைவில் நெருங்குவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 7-ம் தேதி முதல் நடந்துவருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேல் வாசிகள் கொல்லப்பட்டதாகவும், 199 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.
இதன்காரணமாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 2,750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `ஹமாஸை இந்த பூமியிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம். போரை ஆரம்பித்தது ஹமாஸ் தான், எனவே போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை. ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் உட்பட அவரின் குழுவினர் எங்கள் பார்வையில் இருக்கின்றனர். விரைவில் நெருங்குவோம்' என தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் போர் தீவிரமடைவதால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!
அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?
என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!