சூப்பர்... 50 வருஷத்துக்கு சார்ஜர் தேவையில்லை; சந்தைக்கு வருகிறது சீனாவின் லேட்டஸ்ட் பேட்டரி!

By காமதேனு

சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனமொன்று உருவாக்கி அசத்தியுள்ளது. இதன் மூலம் மின்னணு துறையில் மிகப்பெரும் புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மற்றும் 2025-க்கு இடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்த 14-வது ஐந்தாண்டு திட்டத்தை சீனா செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், அணு மின்கலங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் விளைவாக, சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ‘பீட்டா வோல்ட்’ (Beta volt) புதிய வகை பேட்டரியை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் பீட்டா வோல்ட் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருக்கிறது.

63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) ஒரு நாணயத்தை விட சிறிய தொகுதியாக வைத்து, அணுசக்தியை ஆற்றல் சக்தியாக மாற்றித் தருவது உலகிலேயே முதன் முதலில் இந்த பேட்டரி தான் என்று பீட்டா வோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பீட்டா வோல்ட் தயாரிக்கும் தனது முதல் அணுக்கரு பேட்டரி 15x15x5 கன மில்லிமீட்டர் அளவில் இருக்கும் என்று கூறியுள்ளது. இதனால் 100 மைக்ரோ வாட் மற்றும் 3 வோல்ட் பவரை வழங்க முடியும். இருப்பினும், 2025-க்குள் 1 வாட் ஆற்றலை வழங்கும் மேம்படுத்தப்பட்ட பேட்டரியை தயாரிப்பதே தங்களின் இலக்கு என்றும், அளவில் சிறிதாக இருப்பதால் அதிக சக்தியை உருவாக்க அவற்றை ஒன்றாக இணைக்க முடியும் என்றும் பீட்டா வோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அடுத்த தலைமுறை பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளது. சோதனைகளுக்கு பின் அவை தொலைபேசிகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளது பீட்டா வோல்ட்.

விண்வெளி, ஏஐ உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட சென்சார்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோக்கள் போன்ற பல விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரிகளால் நீண்ட கால மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்கிறது பீட்டா வோல்ட்.

ஏஐ தொழில்நுட்ப புரட்சியில் சீனா முன்னேறிச் செல்ல தங்களின் இந்த பேட்டரி தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும் என்று பீட்டா வோல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!

அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!

இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்: மாயாவதிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சர்ச்சைக்குள்ளான பெயர் பலகை!

திருநங்கை அப்சராவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: பிரபல யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE