வாழ்க்கையை மாற்றியமைத்த கொரோனா: விமானத்தில் 900 கி.மீ தூரம் அலுவலகம் செல்லும் ஊழியர்!

By காமதேனு

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெனரல் பத்திரிகை நிருபர் ஒருவர் தினமும் விமானத்தில் தான் அலுவலகம் சென்று வருகிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

செய்தியாளர் சிப் கட்டர்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் நம்மில் பலருக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மூச்சு முட்ட வைக்கும் போக்குவரத்து நெரிசலும், நுரையீரலை பதம் பார்க்கும் காற்று மாசும் வெளியில் கிளம்பி வீடு திரும்புவதற்குள் ஒரு வழியாக்கி விடுகின்றன. ஆனால், இத்தகைய சிரமங்கள் எதுவுமின்றி தனது அலுவலகத்திற்கு 900 கிலோ மீட்டர் விமானத்தில் சென்று வருகிறார் அமெரிக்க பத்திரிகையாளர் சிப் கட்டர்.

அமெரிக்காவின் ஒஹியோவில் வசிப்பவர் சிப் கட்டர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜெர்னலின் நிருபரான இவர், கொரோனா காலத்திற்கு முன்பு நியூயார்க்கில் தான் வசித்து வந்தார். கொரோனாவுக்காக நியூயார்க் வசிப்பிடத்தைக் காலி செய்துவிட்டு ஓஹியோவுக்கு வந்தார். அங்கிருந்தவாறு அலுவலகப் பணியை மேற்கொண்டு வந்தார். ஓஹியோவின் வாழ்க்கை சூழல் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

விமானம்

பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் அவர் மீண்டும் நியூயார்க் சென்று சென்று தங்க விரும்பவில்லை. அங்குள்ள வாழ்க்கை சூழல் அவருக்கு ஒத்து வரவில்லை.

அதனால் நியூயார்க்கிற்கு செல்லாமல் ஓஹியோவில் இருந்து விமானம் மூலம் அலுவலகம் சென்று வருகிறார். வாரத்திற்கு மூன்று முறை ஓஹியோவில் இருந்து நியூயார்க்கிற்கு விமானம் மூலம் அலுவலகம் சென்று வருகிறார். ஓஹியோவில் இருந்து நியூயார்க் சென்று திரும்ப சுமார் 900 கிலோ மீட்டராகிறது. இந்த தொலைவுக்குப் பயணித்து அவர் அலுவலகம் சென்று வருகிறார்.

வாரத்தில் மூன்றுமுறை, தான் இப்படி பயணம் செய்து அலுவலகத்திற்கு சென்று வருவதாக தெரிவித்த அவர், இது நியூயார்க்கில் வாழ்வதை விட மிகவும் மலிவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக நியூயார்க்கில் உள்ள ஸ்டுடியோ குடியிருப்பில் வசித்து வந்த அவர் அதற்காக மாதம் 3,200 டாலர்கள் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2,65,581 ஆகும். இத்தகைய சூழலில் விமான பயணமே சிறந்ததாகவும். மலிவானதாகவும் இருப்பதாக கருதுகிறார் கட்டர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE