அமெரிக்க பெண் பேராசிரியருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

By காமதேனு

ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கிளாடியா கோல்டின்

கடந்த 2-ம் தேதி முதல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஏற்கெனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்லைக்கழகத்தின் பெண் பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை தொழிலாளர்களில் (labour market) பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE