இரண்டே நிமிடத்தில் 200 ஊழியர்களின் வேலை பறிபோனது... ஆண்டின் முதல் பணி பறிப்பு அச்சுறுத்தல்

By காமதேனு

அமெரிக்காவின் ஃபிரண்ட்டெஸ்க் என்ற நிறுவனம் 2 நிமிட காணொலி அழைப்பில் 200 ஊழியர்களின் பணியை பறித்திருக்கிறது. ஆண்டின் முதல் பெரும் பணி பறிப்பு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

நிதி நெருக்கடி காரணமாக நிறுவனம் திவாலாகும் நிலையை தடுப்பதற்கான உத்தியாக, கணிசமான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதாக அதன் சிஇஓ ஜெஸ்ஸி டிபின்டோ தெரிவித்துள்ளார். திவாலுக்கு மாற்றான ஸ்டேட் ரிசீவர்ஷிப் எனப்படும் அமெரிக்க தேசத்தின் சாத்தியத்தை தற்போது அந்த நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

பணி நீக்கம்

அடுக்குமாடி குடியிருப்புகளை குத்தகைக்கு எடுத்து, குறுகிய கால வாடகைக்கு விடுவதும், அதனை நவீன தொழில்நுட்பத்தில் பராமரிப்பதுமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று ஃபிரண்ட்டெஸ்க். ’பிராப்பர்டி - டெக்னாலஜி’ என இரண்டின் கூட்டணியிலான இந்த வணிக உத்தி வரவேற்பையும், வருவாயையும் பெருக்கித் தந்தது. ஆனால் ’ஸென்சிட்டி’ என்ற போட்டி நிறுவனம் ஒன்றை வாங்கியதில், அதனுடன் வந்த பிரச்சினைகள் மூல நிறுவனத்தை நிதி நெருக்கடியில் தள்ளின.

நேற்று முன்தினம் கூகுள் மீட் அழைப்பில் ஊழியர்களை அழைத்த ஜெஸ்ஸி டிபின்டோ, இரண்டே நிமிடங்கள் நீடித்த அந்த விர்ச்சுவல் சந்திப்பில் 200 ஊழியர்களின் பணிகளை பறித்தார். அமெரிக்கா முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்வகிப்பதில் தேர்ச்சி பெற்ற இந்த நிறுவனத்தின் திடீர் ஊசலாட்டம் அதையொட்டிய இதர நிறுவனங்களையும் உலுக்கி உள்ளது.

பணி பறிப்பு

ஆண்டின் முதல் மோசமான பணி நீக்கமாக பார்க்கப்படும் ஃபிரண்ட்டெஸ்க் நிறுவனத்தின் பாதிப்பு, சங்கிலித் தொடராக இதர நிறுவனங்களையும் பாதிக்கும் அபாயமும் எழுந்திருக்கிறது. கொரோனா பரிசளித்த சவால்களில் இருந்து உலக பொருளாதாரம் 2023-ல் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இத்துடன் ஏஐ வருகையும் இணைந்துகொள்ள, கொத்துக்கொத்தாக கடந்த ஆண்டில் பணியாட்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். தற்போது 2024-ன் தொடக்கம் ஃபிரண்ட்டெஸ்க் வாயிலாக, டெக் உலக பணியாட்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

சனிக்கிழமை `நோ லீவ்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பயங்கரம்... காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்! பதறிய பொதுமக்கள்

விஜயின் அரசியல் மாஸ்டர் பிளான்... பிரம்மாண்ட மாநாட்டில் கட்சி அறிவிப்பு?

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் எந்த முன்னேற்றமும் இல்லை... சிஐடியு சௌந்தரராஜன் விமர்சனம்!

விண்வெளியில் மின்சாரம், தண்ணீர் தயாரித்து அசத்தல் - இஸ்ரோவின் மாபெரும் சாதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE