ஐபோன் கேட்டு சண்டை: 8 வயது தங்கையை கொலை செய்த 12 வயது சிறுமி!

By KU BUREAU

ஐபோன் கேட்டு சண்டையிட்ட தனது 8 வயது தங்கையை 12 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னசியில் கோடை விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு அவரது இரண்டு பேத்திகள் பெற்றோருடன் வந்திருந்தனர். ஒருவரின் வயது 12, மற்றொருவரின் வயது 8. பாட்டி வீட்டில் ஐபோன் தொடர்பாக அக்கா, தங்கை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 12 வயது சிறுமி தனது தங்கையின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மேலும், தன் மீது யாருக்கும் சநதேகம் வராத வகையில் குற்றத்தை மறைக்க தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்த சிறுமி டெமரியா ஹோலிங்ஸ்வொர்த் (8) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து பெற்றோரின் புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து சிறுமியை கைது செய்தனர். கொலை மற்றும் சாட்சியங்களை அழித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் சிறுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE