'நோய் வந்துவிடுமோ' என்ற பயத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்த ‘உலகின் அழுக்கு மனிதர்’ என அழைக்கப்பட்ட நபர் ஈரானில் 94 வயதில் மரணமடைந்தார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் தனிமையில் இருந்த அமு ஹாஜி, ஈரான் நாட்டின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
50 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்ததற்காக "உலகின் அழுக்கு மனிதர்" என்று இவர் அழைக்கப்பட்டார்.
அமு ஹாஜி "உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்" என்ற அச்சத்தில் குளிப்பதை தவிர்த்தார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் "சில மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக, கிராமவாசிகள் வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று குளிப்பாட்டியுள்ளனர்" என்றும் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.