60 நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு 249 ஆண்டுகள் சிறை!

By KU BUREAU

டார்வின்: ஆஸ்திரேலியாவில் 60-க்கும் மேற்பட்ட நாய்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற விலங்கியல் நிபுணருக்கு 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் டார்வினில் உள்ள தனது வீட்டில் 60-க்கும் மேற்பட்ட நாய்களை ஆடம் பிரிட்டன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாய்களை அவர் கொலை செய்ததாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் மாதம் நடைபெறும். அப்போது தண்டனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஆடமின் வழக்கறிஞர்கள் நியூயார்க் உச்ச நீதிபதி மைக்கேல் கிராண்டிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் போது விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் சலசலப்பை எற்படுத்தியதால், அவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அப்போது தனக்கு மரணதண்டனை வழங்குமாறு ஆடம் பிரிட்டன் கோரிக்கை விடுத்தார்.

நாய்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததை ஆடம் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தற்போது அவருக்கு மனநலம் சரியில்லை என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே ஆடம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பல வருடங்கள் அவரால் வாழ முடியாது என்பதால் தண்டனையைக் குறைக்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

விலங்கியல் நிபுணரான ஆடம் பிரிட்டன், 1971-ம் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்ற அவர், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர் சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். ஆடம் விலங்குகளுக்கு கொடுமை விளைவித்தது, குழந்தையை துஷ்பிரயோகம் போன்ற 25 க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE