வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?

By காமதேனு

வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரோலின் ஆர். பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கே. பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் மேம்பாட்டுக்காக இம்மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கூறுகளை உருவாக்க சுற்றுச்சூழலுக்கு தூய்மையான வழியைக் கண்டுபிடித்ததற்காக 2021 ம் ஆண்டில், வேதியியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யூ.சி. மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2020 ல் மரபணு தொழில்நுட்ப கருவியான CRISPR/Cas9 மரபணு கத்தரிக்கோலைக் கண்டுபிடித்ததற்காக இம்மானுல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

திங்களன்று ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரெஞ்சுகாரரான அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்கரான ஜான் எப். கிளாசர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த அன்டன் ஜூலிங்கர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

விஞ்ஞான உலகில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் இந்த விருதுடன் ஒரு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் 10 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரௌன்கள் ( 900,357 டாலர்) அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் அடங்கிய பரிசுகள் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE