வேண்டாம் என்று குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் பொருட்களை விற்று ஒரே ஆண்டில் 56.20 லட்ச ரூபாயை இளைஞர் ஒருவர் சம்பாதித்துள்ளார் என்ற செய்தி வைரலாகி வருகிறது
அன்றாடம் நாம் வீடுகளில் பயன்படுத்தி விட்டுத் தேவையான பொருட்களைக் குப்பைத் தொட்டிகளில் கொட்டுகிறோம். இதில் இருந்து கிடைக்கும் சில பொருட்கள் தான், பலரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் சேர்த்து வருகிறது. அப்படி வெளிச்சம் பாய்ச்சப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தான் லியோனார்டோ அர்பானோ. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள குப்பைக் குவியல்களில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை சேகரித்து ரூ.56.20 லட்சத்தை இவர் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த குப்பைக் குவியல்களில் இருந்து குளிர்சாதன பெட்டி, அலமாரி, படுக்கைகள் போன்ற பெரிய பொருட்களையும் தங்க நகைகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
லியோனார்டோ அர்பனோ கடந்த ஆண்டு சிட்னியில் மதிப்புமிக்க பொருட்களை விற்று 1,00,000 ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ. 56.20 லட்சம்) சம்பாதித்தார். அவர் குப்பையில் பைகள், காபி இயந்திரங்கள், தங்க நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை உணவுக்குப் பிறகு, அவர் தனது சைக்கிள் அல்லது காரில் சிட்னி நகரின் தெருக்களில் குப்பைக் குவியல்களைத் தேடுவார் என்றும், அதிலிருந்து அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்களைக் கண்டுபிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
சில சமயங்களில் குப்பையில் காணப்படும் துணிப் பைகள் மற்றும் பைகளில் பணம் கிடைப்பதாகவும் அவர் கூறினார். குப்பையில் இருந்து கிடைத்த ஒரு சிறிய பையை உர்பானோ சுமார் 200 டாலருக்கு விற்றதாக கூறினார். குப்பைகளில் இருந்து கிடைக்கும் சில ஆடம்பரப் பொருட்களை விற்கும் நண்பர்களையும் தொடர்பு கொள்வேன். அவர்கள் மூலம் கடந்த ஆண்டு, 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், 30 குளிர்சாதனப் பெட்டிகள், 20-க்கும் மேற்பட்ட சலவை இயந்திரங்கள், 50 கணினிகள்/மடிக்கணினிகள், 15 படுக்கைகள், 150-க்கும் மேற்பட்ட பானைகள், 100-க்கும் மேற்பட்ட விளக்குகள் மற்றும் அலங்கார ஓவியங்கள் மற்றும் 849 டாலர் ரொக்கம் குப்பையில் இருந்து கிடைத்ததாக லியார்னார்டோ அர்பனோ கூறினார். தன்னைப் போன்றோர் வாழ இதுபோன்ற குப்பைத்தொட்டிகள் அவசியம் என்று கூறுகிறார் இந்த இளைஞர்.
» சென்னை | ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
» உள்ளூர் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துங்கள்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்