இனி இப்படித்தான் தான் அழைக்க வேண்டும்: குரங்கு அம்மையின் மாறுபட்ட திரிபுகளுக்கு புதிய பெயர்கள்!

By காமதேனு

உலக நாடுகளை கரோனாவுக்குப் பின்பு, குரங்கு அம்மை நோய் வாட்டி எடுத்துவருகிறது. அது பல திரிபுகளையும் அடைந்துவரும் நிலையில் மாறுபட்ட திரிபுகளுக்கு புதுப்பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய்க்கு நான்கு பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் மீண்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆனார். அதேநேரம் கேரளத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் குரங்கு அம்மை நோயினால் உயிர் இழந்தார். உலக அளவில் 89 நாடுகளில் 27 ஆயிரத்து 814 பேருக்கு குரங்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.

1958-ம் ஆண்டே முதன்முதலில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. இந்த குரங்கு அம்மை இப்போது பல்வேறு திரிபுகளை அடைந்துவருகிறது. அவற்றிற்கு உலக சுகாதார நிறுவனம் புதுப்பெயர் சூட்டியுள்ளது. அதன்படி, மத்திய ஆப்பிரிக்க நாட்டின் திரிபுக்கு கிளேட் 1 எனவும், மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் குரங்கு அம்மையின் திரிபுக்கு கிளேட் 2 எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிளேட் 2 வின் இரு திரிபுகள் கிளேட் 2 ஏ, கிளேட் 2 பி எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கிளேட் 2 பி வகை வைரஸ் தான் உலக அளவில் பரவிவருகிறது. வர்த்தகம், சுற்றுலா பிராணிகள் நலனைப் பாதிக்காத வகையில், அவற்றின் மீதான எதிர்மறை விளைவைக் குறைக்கும்வகையில் இந்தப் பெயர்களில் அழைக்கப்படவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE