20 ஆண்டுகளில் இல்லாதது இது... அதிபர் தேர்தலில் சொல்லி அடித்த இமானுவேல் மெக்ரான்

By காமதேனு

20 ஆண்டுகளில் 2-வது முறையாக பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மெக்ரான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், அதிபர் தேர்தலின் தற்போதைய அதிபர் இமானுவேல் மெக்ரான், மரைன் லு பென், ஜீன் லுக் மெலன்சோன் உள்பட 12 பேர் களத்தில் நின்றனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2-ம் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இமானுவேல் மெக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இமானுவேல் மேக்ரான் பெருவாரியான வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 20 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெற்றார்.

இமானுவேல் மெக்ரானுக்கு கடும் சவாலாக திகழ்ந்த மரைன் லு பென், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அடுத்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும் வளர்ச்சி தரும் திட்டங்களில் கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் மெக்ரான். 2-வது முறையாக பிரான்ஸ் அதிபராகியுள்ள இமானுவேல் மெக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா- பிரான்ஸ் இடையேயான உறவை பலப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE