அமெரிக்கவாழ் இந்தியரை மொராக்கோ தூதராகப் பரிந்துரைந்த பைடன்!

By காமதேனு

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டுக்கான அமெரிக்கத் தூதராக, அமெரிக்கவாழ் இந்தியரான புனீத் தல்வாரைப் பரிந்துரைத்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

தலைநகர் வாஷிங்டனில் வசித்துவரும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த புனீத் தல்வார், கார்னெல் பல்கலைகழகத்தில் பொறியியல் பயின்ற தல்வார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரம் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.

புனீத் தல்வாரின் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்

தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மூத்த ஆலோசகராகப் பணிபுரிந்துவரும் புனீத் தல்வார், வெள்ளை மாளிகை, அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவற்றின் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அமெரிக்க வெளியுறவுத் துறையின் கொள்கை வகுப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.

ஆசிய சமூகக் கொள்கை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் மூத்த உறுப்பினராகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென் பைடன் மையத்தின் வருகைதரு பேராசியராகவும் இயங்கிவருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE