இஸ்ரேலில் கண்டறியப்பட்ட புதிய திரிபு எப்படிப்பட்டது?

By காமதேனு

கரோனா வைரஸின் புதிய திரிபைக் கண்டறிந்திருப்பதாக இஸ்ரேல் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இரண்டு பேருக்கு இந்தத் திரிபின் தொற்று ஏற்பட்டிருக்கிறது. பென் குரியான் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் இது தெரியவந்திருக்கிறது. எனினும், இதுகுறித்து தேவையற்ற அச்சம் கொள்ளவில்லை என்றும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருக்கிறது.

என்ன திரிபு இது?

ஒமைக்ரான் திரிபின் இரண்டு துணைத் திரிபுகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் இணைப்பாக இந்தப் புதிய திரிபு இருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

என்ன பாதிப்பு?

இந்தத் தொற்றால் லேசான காய்ச்சல், தலைவலி, தசை சிதைவு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிறப்பு மருத்துவ சிகிச்சை எதுவும் இதற்குத் தேவையில்லை என்றும் கூறியிருக்கும் இஸ்ரேல் சுகாதாரத் துறை இந்தத் திரிபு உலகில் வேறு எங்கும் அறியப்படாதது என்றும் அறிவித்திருக்கிறது.

இந்தத் திரிபால் ஆபத்துகள் ஏற்படாது என்றே இஸ்ரேல் நாட்டின் பெருந்தொற்று கண்காணிப்பு அமைப்பின் தலைவர் சல்மான் ஸார்காவும் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE