மரியுபோலில் 2,100 அப்பாவிகள் உயிரிழப்பு

By காமதேனு

மரியுபோல் நகரில் மட்டும் 2,100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் கொன்று குவித்துள்ளாக உக்ரைன் அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தலைநகர் கீவ், மரியுபோல், லிவிவ் நகரங்களில் குண்டுமழை பொழிந்து வருகிறது ரஷ்ய படைகள். மரியுபோல் நகரில் மட்டும் 100 குண்டுகளை ரஷ்ய படைகள் வீசியுள்ளதாக கூறும் உக்ரைன் அரசு, இதில் 2,187 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, உக்ரைனுக்கு ஆதரவான போரிட்ட வெளிநாட்டு வீரர்கள் 180 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், உக்ரைனை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவில்லை என்றால், நேட்டோ நாடுகள் மீதும் ரஷ்யாவின் குண்டுகள் விழும் என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE