`நேருக்கு நேர் பேசுவோம்'- புதினுக்கு ஸெலன்ஸ்கி அழைப்பு

By காமதேனு

2ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படாத நிலையில், நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா- உக்ரைன் அரசுகளுக்கு இடையே நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில், மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவி செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போரை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

புதின் தன்னுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர், புதின் தனது அருகில் அமர்ந்து பேசினால் கடித்து வைத்துவிடமாட்டேன் என்றும் ஏன் அஞ்சுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன் முழுவதையும் ரஷ்யா கைப்பற்றிவிட்டால் அடுத்து ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்காமல் ரஷ்யா போர் தொடுக்கும் என குற்றம்சாட்டிய ஸெலன்ஸ்கி, தாங்கள் நேட்டோவில் இல்லை, அணு ஆயுதங்களும் தங்களிடம் இல்லை. ரஷ்யாவுக்கு தாங்கள் வேறு என்ன உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE