உக்ரைனில் இந்திய மாணவர் மீது துப்பாக்கி சூடு: படுகாயங்களுடன் அட்மிட்

By காமதேனு

உக்ரைனின் லிவிங் நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இந்த மாணவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க தமிழக அரசு, எம்பிக்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் லிவிங் நகரில் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் காரில் சென்றுக்கொண்டிருந்தார். இவிவ் நகரத்தில் அவர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. தன்னை ஆம்புலன்ஸ் மூலம் கீவ் நகர மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், தன்னை இந்தியா அழைத்துச் செல்ல உதவுமாறும் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து வந்த மாணவர் சுடப்பட்டதால் பாதியிலேயே திரும்ப அழைத்து செல்லப்பட்டதாகவும், குறைந்த பாதிப்புடன் இந்தியர்களை அழைத்துவர முயற்சி நடப்பதாகவும் வி.கே.சிங் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE