உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம்- ரஷ்யாவை வலியுறுத்தும் ஐநா

By காமதேனு

“உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும்” என ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் நீண்டகால திட்டமாக உள்ளது. அதே நேரத்தில் நேட்டோவில் உறுப்பு நாடாக உக்ரைனை சேர்க்க ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதுவரையில் உக்ரைனை ஆக்கிரமிக்க மறைமுகமாக காய் நகர்த்தி வந்த ரஷ்யா, படையெடுப்பின் மூலம் உக்ரைனை ஆக்கிரமிக்க முடிவு செய்து அந்த நாட்டின் எல்லையில் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

அதே நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். இதனிடையே, உக்ரைனில் உள்ள தனது தூதரகம், துணை தூதரகங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரையும் வெளியேற்றியது ரஷ்யா. இதன் மூலம் ரஷ்யா போர் தொடங்கலாம் என்ற தகவல் வெளியானது. மேலும், உக்ரைனும் தன் வான்வழியை மூடியது. நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என எச்சரித்துள்ளார். பதினின் இந்த உத்தரவால் ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இதனிடையே, “உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும்” என ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ள படைகளை ரஷ்யா திரும்ப பெற வேண்டும் எனவும் உக்ரைனும், ரஷ்யாவும் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE