உலக அளவில் ஒரேநாளில் 20,86,786 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
உலக அளவில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 20,86,786 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 8 லட்சத்து 53 ஆயிரத்து 688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 12 லட்சத்து 771 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரஸால் இதுவரை 58 லட்சத்து 67 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,14,108 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,784,681 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 952,241 பேராக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 42,752,542 பேராக உயர்ந்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,10,441. கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 41,900,076 ஆக உயர்ந்துள்ளது.