புவியின் வளிமண்டல எல்லையில் சாம்பலாகும் சிறிய செயற்கைக்கோள்கள்

By காமதேனு

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்கைக்கோள்கள், புவிக்கான சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி புவியின் வளிமண்டல எல்லையில் நுழைந்ததில், எரிந்து சாம்பலாகி உள்ளன.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்ட சுமார் 49 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் இவ்வாறு எரிந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியப்புயல் என்று புவிகாந்தப்புயல் என்றும் இதற்கான காரணங்களாக அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று விண்வெளியில் ஏற்பட்ட மாற்றங்களால், எடையில் குறைந்த சிறிய ரக செயற்கைக்கோள்கள் புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகின. அவை புவியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும் முற்றிலுமாக எரிந்தன. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனைத்தும், உலகம் முழுக்க செயற்கைக்கோள் வாயிலான கட்டற்ற இணைய இணைப்பை வழங்கும் பணியில் ஈடுபட்டிருப்பவை. சிறிய ரகத்திலான சுமார் 4000க்கும் மேற்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், இதர செயற்கைக்கோள்களுக்கு விண்வெளியில் பல்வேறு இடையூறுகளை தந்து வருவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்திருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE