உலக அளவில் கரோனா பாதிப்பு 40 கோடியே 03 லட்சத்து 20 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,449 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுதும் பரவிக் கொண்டிருக்கிற கரோனா வைரஸை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 03 லட்சத்து 20 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,146,430 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,449 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 89 ஆயிரத்து 900 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கரோனா பாதிப்பில் இருந்து, இதுவரை 32 கோடியே 06 லட்சத்து 03 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனாவால் உலகம் முழுதும் இதுவரை 57 லட்சத்து 81 ஆயிரத்து 520 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிதாக 162,497 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 78,539,521 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 932,353 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இங்கிலாந்தில் 17,932,803 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 66,450 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 158,677 பேர் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.