அமெரிக்காவில் திடீரென குறைந்த கரோனா பாதிப்பு, மரணம்!

By காமதேனு

அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு லட்சத்தை கடந்து வந்த நிலையில் இன்று 50,561 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 369 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு இன்றும் வீரியம் அடைந்து வரும் நிலையில், உலக அளவில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 39.58 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 57.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.47 கோடி பேர் குணமடந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 50,561 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 369 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரு நாளில் 1.54 லட்சம் பேருக்கும், ஜெர்மனியில் 1.14 லட்சம் பேருக்கும், ரஷ்யாவில் 1.80 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 1.54 லட்சம் பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE