கரோனா பாதிப்பைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

By காமதேனு

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாரிக்கப்பட்டவர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 19,23,548 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20,89,154 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 77 லட்சத்து 3 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 31 லட்சத்து 79 ஆயிரத்து 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 29 கோடியே 88 லட்சத்து 32 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 56 லட்சத்து 91 ஆயிரத்து 153 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாரிக்கப்பட்டவர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 19,23,548 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20,89,154 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,95,245 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 812 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 164,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,218 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 102,616 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 442 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE