பனிப்புயலால் அமெரிக்காவில் 5 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கடற்கரை பகுதிகளை தாக்கியுள்ள பனிப் புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர. நியூயார்க், நியுஜெர்சி, பாஸ்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக 400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாம்ப் சைக்ளோன் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து இருக்கும் நிலையில், வெப்பநிலை 0 டிகிரிக்கு கீழ் சென்றுள்ளது. தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக் கிடப்பதால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு, மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இதனால் 7 கோடி பேர் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப்புயலால் 5 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4 இன்ச் வரை பனி துகள்கள் குவிந்து வருவதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.