கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வந்தாலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 96,954 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 329 பேர் உயிாிழந்துள்ளனர். அதே நேரத்தில் உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37.50 கோடியாக அதிகரித்துள்ளது.
உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுமுனையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 31 லட்சத்து 14 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 29 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 56 லட்சத்து 81 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வந்தாலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 96,954 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 329 பேர் உயிாிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சம் என்று இருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்திருப்பது அந்நாட்டு மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 173,162 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 892 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 104,012 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 280 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.