இந்தியா - மத்திய ஆசியா இடையிலான முதலாவது மாநாடு

By காமதேனு

இந்தியா - மத்திய ஆசியா இடையிலான முதலாவது மாநாடு, இன்று (ஜன.27) காணொலி மூலம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் இந்நிகழ்ச்சியில் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ் குடியரசு, துர்கெமேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், இந்த முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது. நாடுகளின் தலைவர்கள் அளவில் முதன்முறையாக இந்த முயற்சி எடுக்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 2015-ல், பிரதமர் மத்திய ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, அந்நாடுகளுடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன.

2021 டிசம்பர் 18 முதல் 20-ம் தேதி வரை, டெல்லியில் இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற 3-வது மாநாடு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. அத்துடன், வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள், ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள், கலாச்சார ரீதியிலான தொடர்புகள் எனப் பல்வேறு அம்சங்களும் விவாதிக்கப்படவிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE