சுந்தர் பிச்சை மீது மும்பை காவல் துறை வழக்குப் பதிவு: பின்னணி என்ன?

By காமதேனு

கூகுள் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மீது, மும்பை காவல் துறை வழக்குப் பதிவுசெய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிவுட் இயக்குநர் சுனில் தர்ஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ’ஏக் ஹஸீனா தி ஏக் தீவானா தா’ எனும் இந்திப் படம் சட்டவிரோதமாக யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், கூகுள் நிறுவனத்தின் அனுமதியின் பேரில் அந்தப் படம் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும் மும்பை காவல் துறையில் சுனில் தர்ஷன் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காப்புரிமை சட்டத்தை மீறியதாக சுந்தர் பிச்சை மீதும், கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் மீதும் இன்று வழக்குப் பதிவுசெய்திருக்கிறார்கள் மும்பை போலீஸார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE