கடலுக்கடியில் வெடித்துச் சிதறிய எரிமலை!

By காமதேனு

டோங்கோ நாட்டில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பீதியுடன் வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கோ நாட்டில், ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கடியில் அமைந்துள்ளன. இந்நிலையில், கடலுக்கடியில் பெரும்பகுதியுடன் உள்ள ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக, கடலில் சுனாமி அலை உருவாகியுள்ளது.

இந்த சுனாமி அலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. இதனால் மக்கள் வீட்டைவிட்டு பீதியுடன் வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனர். குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE