2 மாதத்தில் கருவுற்ற 5 ஆயிரம் மாணவிகள்!

By காமதேனு

ஜிம்பாப்வேயில் முழு ஊரடங்கு காலத்தில், 5 ஆயிரம் பள்ளி மாணவிகள் கருவுற்று இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார், அந்நாட்டின் பெண்கள் விவகாரத் துறை அமைச்சர் சிதேம்பிசோ நியோனி.

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான, ஜிம்பாப்வேயின் மக்கள் தொகை எண்ணிக்கை 1.5 கோடி. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, அந்த நாட்டில் கடந்த 2020 மார்ச் முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவ்வவ்போது சில பள்ளிகளும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், குழந்தைகளுக்கான பாலியல் குற்றச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தாத காரணத்தாலும், கலாச்சாரம், வறுமை மற்றும் மத அடிப்படையிலான நம்பிக்கை காரணத்தாலும் பல சிறுமிகள் கருவுற்று உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் கருவுற்ற சிறுமிகள் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதற்கு பணம் இல்லாததால், 13 வயதுடைய சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுக்கும் அவலம் நடந்துள்ளது. 2021-ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் மட்டும் 5 ஆயிரம் பள்ளி மாணவிகள் கருவுற்றுள்ளதாக, அந்நாட்டின் பெண்கள் விவகாரத் துறை அமைச்சர் சிதேம்பிசோ நியோனி வேதனை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE