ஃபேஸ்புக்கின் பெயர்மாற்றம் : மார்க் ஸூக்கர்பெர்க் அறிவிப்பு

By காமதேனு

சில தினங்களுக்கு முன்பு, ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றவிருப்பதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இன்று நடந்த ‘ஃபேஸ்புக் கனெக்ட்’ நிகழ்ச்சியில் ஃபேஸ்புக்கின் பெயர் ‘மெட்டா’ என்று மாற்றப்படவுள்ளதாக அந்நிறுவனத்தை உருவாக்கியவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஸுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். வெறும் சமூக வலைதளமாக மட்டுமல்லாமல், ஒரு மெட்டாவெர்ஸ் (மெட்டா+யுனிவர்ஸ்) நிறுவனமாக நாங்கள் மாறவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

‘ஃபேஸ்புக் கனெக்ட்’ நிகழ்வு:

மெட்டாவெர்ஸ் :

தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அதன் கட்டுப்பாட்டில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய முதன்மையான சமூக வலைதளங்களை வைத்துள்ளது, இது மட்டுமல்லாமல் விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங் தளங்கள், லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என்ற பல நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இனிவரும் காலங்களில், இவையனைத்தையும் இணைத்து மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இதன் ஆரம்பகட்ட நகர்வுதான் ‘மெட்டா’ என்ற பெயர்மாற்றம்.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனத்தின் பெயர்தான் மெட்டா என்று மாறியிருக்கிறதே தவிர, ஃபேஸ்புக் இணையதளத்தின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடரும் என்று கூறப்படுகிறது. உதாரணத்துக்கு, கூகுளை நிர்வகிக்கும் நிறுவனம் ‘ஆல்பபெட்’ என்ற பெயரிலிருந்தாலும், அதன் இணையதளத்தின் பெயர் கூகுள் என்றே தொடர்வதுபோல ஃபேஸ்புக்கும் தொடரும். ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகத்துக்குள்ளிருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற இணையதளங்கள் இதன் பின் மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும். பெயர்தான் மாறியிருக்கிறதே தவிர அதே பழைய நிர்வாகம்தான்.

இந்த மெட்டாவெர்ஸில் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமென்டட் ரியாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இனிவரும் காலங்களில் மொபைல், கணினி என்பதைத் தாண்டி நாம் அணிந்துகொள்ளும் கண்ணாடி, கை கடிகாரம் போன்ற உபகரணங்களில் இணையத்தின் வீச்சு பல மடங்கு உயரப்போகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

தற்போது meta.com என்ற இணையதளத்தை ஆரம்பித்து, இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுவருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE