அரசியல் குழப்பத்தால் ஆட்டம் காணும் இலங்கை!

By காமதேனு

நந்து

2015-ல் மைத்ரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். சிறிசேனா அதிபராகவும் விக்ரமசிங்கே பிரதமராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ராஜபக்ச அதிபராக இருந்தபோது 2009-ல் இலங்கையின் இனப் போர் முடித்து வைக்கப்பட்டது. அப்போது ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சிறிசேனா அதிபரானதும் இதற்கெல்லாம் நியாயம் கிடைக்கும் என்றும், தமிழர் பகுதிகளில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் முழுமைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த முன்னேற்றமும் நடந்துவிடவில்லை.

இந்நிலையில் அக்டோபர் 26-ல், விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்வதாகவும் ராஜபக்சவைப் புதிய பிரதமராக நியமிப்பதாகவும் தடாலடியாக அறிவித்தார் சிறிசேனா. இதற்கு,  “விக்ரமசிங்கே தன்னைக் கொல்வதற்கு சதிசெய்தார்” என்று காரணம் சொன்னார் சிறிசேனா. ஆனால், விக்ரமசிங்கே பதவி விலக மறுத்தார். அமைச்சர்கள், சபாநாயகர் கரு ஜெயசூர்யா உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு
அவருக்கே உள்ளது. விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். பெட்ரோலிய அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்கா வின் அலுவலகத்திலும் போராட்டம் வெடித்தது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE