முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் எழுத்து வடிவிலான கடைசி உரையை அவருடைய குரலிலேயே வெளியிட்டிருக்கிறார்கள்.
நவம்பர் 22, 1963 அன்று டல்லாஸ் டிரேட் மார்டில் வணிகர்கள், ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்த வந்தபோதுதான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடி நிகழ்த்துவதாக இருந்த உரையின் எழுத்து வடிவம் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுவந்தது.
அதை கென்னடியின் 800-க்கும் மேற்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளின் துணையோடு அவரது வார்த்தைகளிலேயே பொருத்தி உரையைக் கொண்டுவந்திருக்கிறார்கள்