அமெரிக்காவில் ஊடகங்களின் துணிச்சல் எத்தகையது என்பதற்கு மற்றுமொரு உதாரணம், ‘தி நியுயார்க்கர்’ இதழின் அட்டைப்படம். அதிபர் ட்ரம்ப்பை அம்மணமாக்கி அம்பலப்படுத்தியிருக்கிறார் கேலிச்சித்திரக்காரர் பேரி பிலிட்ஸ்.
‘ஊடகங்களிடம் ட்ரம்ப் காட்டும் எரிச்சலானது, உண்மை மீதான அவருடைய எரிச்சல்’ என்பதே அமெரிக்க ஊடகங்களின் விமர்சனம். ஊடகச் சந்திப்பில் ட்ரம்ப் நிர்வாணமாக உரையாற்றுவது போன்ற கேலிச்சித்திரம் அதை வெளிப்படுத்தியிருக்கிறது.