தன் அண்டை நாடுகள் அனைத்தையும்விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக ஐ.நா சபைசார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் 156 நாடுகளில் ஃபின்லாந்து முதல் இடத்திலும் புருண்டி கடைசி இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 75-வது இடம்பெற்றுள்ளது. இந்தியாவோ 133-வது இடத்தில் உள்ளது. தனிநபர் வருமானம், சராசரி ஆயுள், சமூக ஆதரவு, சுதந்திரம் உள்ளிட்ட ஆறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.