லண்டனிலிருந்து ஒரு அபாய எச்சரிக்கை!

By காமதேனு

மிகக் கடுமையான பனிப்புயல் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது இங்கிலாந்து. தண்ணீர் விநியோகிக்கும் குழாய்களுக்குள் இருந்த தண்ணீரெல்லாம் பனிக்கட்டியாக மாற, அழுத்தம் தாங்க முடியாமல் குழாய்கள் அனைத்தும் வெடித்திருக்கின்றன.

தண்ணீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் லண்டனில் மட்டும் பல தொழிற்சாலைகளும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பாட்டில் குடிநீர் வாங்க மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். பருவநிலை மாற்றத்தின் மீது சர்வதேச தலைவர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் மேலும் மேலும் அதிகமாகிறது! 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE