போராட்டமே கொண்டாட்டம்!

By காமதேனு

நம்மூர் ‘தைப் புரட்சி’யைப் போல, ஸ்பெயின் நாட்டில் மார்ச் 8-ம் தேதியன்று மிகப் பெரிய போராட்டம் கொண்டாட்டமாக நடந்தேறியிருக்கிறது.

பாலின சமத்துவமின்மை மற்றும் வேலைவாய்ப்பில் பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான இந்த 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல லட்சம் பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ‘மார்ச் 8 ஆணையம்’ என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இப்போராட்டத்துக்கு தொழிற்சங்கங்களும் அந்நாட்டின் பெண் அமைச்சர்கள் சிலரும் ஆதரவளித்தனர். நாடெங்கும் 200 இடங்களில் போராட்டங்கள் நடந்தன. வேலைக்குச் செல்லாத பெண்களும்கூட, போராட்டத்துக்கு ஆதரவாக, வீட்டு வேலைகளைப் புறக்கணித்தார்கள்! சர்வதேச மகளிர் தினத்தை அதன் வரலாற்றுக்கு மிகப் பொருத்தமான வகையில் கொண்டாடியிருக்கிறார்கள் ஸ்பானியப் பெண்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE