சவுதியின் முகம் மாறுகிறது!

By காமதேனு

சவுதி அரேபியப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்துவருகின்றன. காரணம், சர்வதேச சமூகத்தின் குரல்களுக்கு மதிப்பளிக்கும் தற்போதைய அரசர் சல்மான்.

ஏற்கெனவே, கால்பந்து போட்டிகளை நேரில் பார்க்கலாம் என்றும், ஜூன் மாதத்திலிருந்து கார் ஓட்டலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ராணுவப் பணிகளில் சேரவும் பெண்களை அனுமதித்திருக்கிறது சவுதி அரசு.

ஆயினும், பெண்களின் பாதுகாவலர்களாக ஆண்களைக் கருதும் சட்டங்கள் இருக்கும் வரை உண்மையான பெண் சுதந்திரம் சாத்தியமில்லை என்கிறார்கள் பெண்ணுரிமை ஆர்வலர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE