சமீபத்தில் நடந்த துயர சம்பவம் ஒன்றில் தன் தாயை இழந்து மீட்கப்பட்ட குட்டி யானையின் புகைப்படம் ஒன்றை வனப்பணி அதிகாரி பர்வீன் கேசவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அந்தக் குட்டி யானையின் படம் இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.
வனப்பணி அதிகாரி பகிர்ந்துள்ள அந்த படத்தில் மரத்தடுப்புகளுக்கு உள்ளே இருக்கும் சோகம் நிறைந்திருக்கும் அந்தக் குட்டி யானை, நீட்டிய துதிக்கையை அதற்கு நம்பிக்கை அளிக்கும் படி தாங்கிப்பிடித்தபடி இருக்கிறது அதிகாரியின் கைகள். அந்தப் பதிவில், "அவள் (குட்டி யானை) தனது தாயை இழந்து விட்டாள். அவள் நேற்றுதான் இங்கு கொண்டுவரப்பட்டாள். தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தை நமது தேசிய பூங்காவின் மத்திய முகாமில் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பூங்காவின் மத்திய முகாமில் குட்டி யானை பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க வனக்குழு மேற்கொள்ளும் முயற்சியை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இந்தப் பதிவினை இதுவரை, 38 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2க்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பயனர் ஒருவர், "அவளுக்கு ஏதாவது குடும்பம் இருக்கிறதா, அவள் தனது மந்தையுடன் இணைந்து கொள்ள முடியுமா? யானைகள் மிகவும் சமூக பிணைப்பு கொண்டவையாக அறியப்படுகின்றன. ஏதாவது ஒரு பசு தாய்க்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
» குற்றாலம் ஐந்தருவியில் மலைப்பாம்பு மீட்பு
» அந்தரத்தில் சுழன்று அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் @ கேதார்நாத்
அதற்கு, "அது சாத்தியம் இல்லை. அவளுடைய தாய் தனியாகதான் இருந்தது. அது இறந்து விட்டது. நாங்கள் எல்லா காரணிகளையும் வைத்துத்தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்" என்று பதில் அளித்துள்ளார்.
கேசவன் இதயத்தை உருகச் செய்யும் கதைகளை பகிர்வதற்காக பிரபலமாக அறியப்படுகிறார். கடந்த மார்ச் மாதத்தில், அவர் தனது தாயை இழந்து கடினமான வாழ்க்கையை தொடங்கிய கஜராஜ் என்ற மற்றொரு அநாதை யானைக்குட்டி கதையை பகிர்ந்திருந்தார்.
இந்தக் கதைகள் அனைத்தும், வன உயிர்களைப் பாதுகாப்பதில் கேசவன் மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை எடுத்துக்காட்டுகிறது.
இவரது சமூக வலைதள பக்கம், வன உயிர் வாழ்க்கையை பற்றிய உந்துதலை உருவாக்கும் புதையலாகவும், அவைகளை பாதுகாக்கும் முயற்சி, சாதனை, அதற்கான வேலை போன்றவைகளை எடுத்துக்காட்டும் விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.