புனே: விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது இரும்புக் கதவு விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது பெரிய இரும்பு கதவு விழுந்து பலியான சம்பவம் அஙகிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு குழந்தை இரும்புக் கதவில் ஏறி விளையாட முயல்கிறது. அப்போது பல ஆண்டுகளாக துருப்பிடித்திருந்த கதவு, குழந்தை ஏறி விளையாடத் தொடங்கியபோது திடீரென அங்கு வந்த ஒரு பெண் குழந்தையின் தலையில் விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான பயங்கர காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர் உறுதிப்படுத்தினார். இறந்த குழந்தையின் பெயர் கிரிஜா என்பதும், அவரது தந்தை பெயர் கணேஷ் ஷிண்டே என்பதும் தெரிய வந்தது.
இரும்புக்கதவு சேதமடைந்தது கட்டிட உரிமையாளருக்குத் தெரிந்தும் சீரமைக்கவில்லை. இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
» சதுரகிரியில் குவிந்த 7,000+ பக்தர்கள் - அடிப்படை வசதிகள் இன்றி அவதி
» காலி மனைக்கு வரிவிதிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் அதிரடி கைது