செல்போனை வழிப்பறி செய்த இளைஞருக்கு உடனடி தண்டனை: பதைபதைக்க வைக்கும் வீடியோ

By KU BUREAU

செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞர் மீது பேருந்து மோதிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வழிப்பறி நடப்பதே சகஜமாகி விட்டது. இதுபோன்ற சம்பவம் ஒன்று பிரேசிலில் நடந்துள்ளது. ஆனால், கிளைமாக்ஸ் வேறு மாதிரி அமைந்து விட்டுது. பிரேசிலின் சாவ் பாலோ நகரில் 71 வயது முதியவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதைக் கண்காணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென முதியவரின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், சத்தம் போடுகிறார்.

அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு சாலையைக் கடக்க முயன்ற போது அந்த இளைஞர் மீது பேருந்து மோதியது. இதில் அவர் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மூலம் உடனடியாக அந்த இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதியவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு இளைஞர் ஓடும் போது பேருந்து மோதிய காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருட்டுக்கு கிடைத்த உடனடி தண்டனை என்று சிலரும், குற்றவாளிக்கு இது பொருத்தமான தண்டனை என்று சிலரும், திருடுவதற்கு முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது என்று பலரும் கருத்திட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE